சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதையடுத்து Dream 11, MPL ஆகியவை தங்கள் தளத்தில் நிஜ பணத்தை வைத்து விளையாடும் கேம்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் MPL நிறுவனம் இந்தியாவில் தனது 60% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. பணம் கட்டி விளையாடும் போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், வருவாய் இழப்பை சமாளிக்க பணிநீக்கம் செய்ய முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.