Saturday, May 17, 2025

பிரதமர் மோடியின் காலடியில் இந்திய ராணுவம் – ம.பி. துணை முதல்வர் சர்ச்சை பேச்சு

மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா கர்னல் சோபியா குரேஷி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதே மாநிலத்தின் துணை முதல்வர் ஜகதீஷ் தேவ்டா இந்திய ராணுவத்தை குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் “இன்று முழு நாடும், ராணுவமும் பிரதமர் நரேந்திர மோடிஜிக்குப் பணிந்து நன்றி செலுத்துகிறது. அவர் எடுத்த தைரியமான நடவடிக்கைக்கு, அவரது பதிலுக்காக. அவருக்கு ஒரு பெரிய கைதட்டல் கொடுங்கள்,” என்றும், கூட்டத்தில் உள்ளவர்களை கையை தட்டச் சொன்னார்.

அவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவம் நாட்டைக் காக்கிறது. அரசியல்வாதிகளின் அகந்தைகளை அல்ல. ‘இந்திய ராணுவம் பிரதமர் மோடியின் பாதத்தில் பணிகிறது’ என்ற கூற்று மிகக் கடுமையான அவமதிப்பு என கூறியுள்ளது.

Latest news