Friday, August 15, 2025
HTML tutorial

சென்னையில் சாலைகளில் தஞ்சமடையும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி

சென்னை பள்ளிக்கரணையில் இரவு நேரங்களில் சாலைகளில் தஞ்சமடையும் மாடுகளால் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

பள்ளிக்கரணை-வேளச்சேரி பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் மாடுகள் தஞ்சம் அடைகின்றன.

இதனால், தினந்தோறும் இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும், சாலைகளில் மாடுகளை விடும் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும், சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகள் வராமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News