பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கிக்கொண்ட மகனை பாதுகாப்பதற்காக 90 வயதான தாய் ஒருவர் சட்டம் கற்றுக்கொண்ட சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
இவரது மகன் உள்ளூர் தொழிலதிபரை மிரட்டி 141 கோடி ரூபாய் ( 117 மில்லியன் யுவான்) பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் விசாரணை ஜெஜியாங் மாகாணத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை அடுத்து தன் மகனைப் பிரிந்து வாடும் அந்த தாய் தனது மகனை பாதுகாக்க குற்றவியல் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பற்றிய புத்தகங்களை வாங்கி தானே சட்டம் பயில தொடங்கி இருக்கிறார்.
மருத்துவர்கள், மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்த போதிலும், தனது மகனின் பக்கத்தில் இருக்க விரும்பிய ஹீ, வெளியேற மறுத்திருக்கிறார். தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.