Tuesday, October 7, 2025

உலகிலேயே அதிகமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நாடு இதுதான்

இன்ஸ்டாகிராம் ஒரு புகைப்படப் பகிர்வு சமூக ஊடகமாகத் துவங்கி, பின்னர் உலகளவில் மிக பிரபலமான சமூக வலைதளமாக மாறியது. இன்ஸ்டாகிராம், உலகளவில் மிகப்பெரிய சமூக ஊடகமாகவும், வணிகத் தளமாகவும் உருவாகி வருகிறது.

உலகிலேயே அதிகமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நாடு இந்தியாதான். இந்தியாவில் சுமார் 413 மில்லியன் (41.3 கோடி) மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். அதில் 33.1 சதவிகிதம் பெண் பயனர்கள், 66.9 சதவிகிதம் ஆண் பயனர்கள். இந்த அதிக எண்ணிக்கைக்குக் காரணம் அதன் மிகப்பெரிய மக்கள் தொகைதான்.

இந்தியாவில் ஸ்மார்ட்போனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்.

இரண்டாவது இடத்தில் அமேரிக்கா உள்ளது. அங்கு 172.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள். அங்கு ஆண்களை விட பெண்கள் அதிகமாக இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறார்கள்.

மூன்றாவது இடத்தில் பிரேசில், நான்காவது இடத்தில் இந்தோனேசியா, ஐந்தாவது இடத்தில் துருக்கி இடம்பெற்றுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News