கைகளின் அழகை உயர்த்துவதில் நெயில் பாலிஷ் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நிறங்களில் கிடைக்கும் நெயில் பாலிஷ்கள் நகங்களுக்கு தனித்துவமான அழகை அளிக்கின்றன. பொதுவாக சந்தையில் நெயில் பாலிஷ் 40 முதல் 100 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கிறது. ஆனால் ஒரு நெயில் பாலிஷ் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் இருக்கும் என்று நினைத்ததுண்டா? இது ஆச்சரியமாக தோன்றினாலும், ஆடம்பர உலகில் அது உண்மையாகும்.
உலகின் மிக விலையுயர்ந்த நெயில் பாலிஷை Azature Pogosian உருவாக்கியுள்ளார். அவர் உருவாக்கிய இந்த சிறப்பு தயாரிப்பு “Azature Black Diamond Nail Polish” என அழைக்கப்படுகிறது. இது 267 காரட் அரிய கருப்பு வைரங்களை கொண்ட ஆழமான கருப்பு நிற நெயில் பாலிஷ் ஆகும்.
இந்த நெயில் பாலிஷின் விலை சுமார் 2,50,000 அமெரிக்க டாலர் ஆகும். இந்திய மதிப்பில் இது சுமார் 1.9 கோடி ரூபாய் ஆகும். இந்த தொகையில் இந்தியாவின் பல நகரங்களில் ஒரு வீடு அல்லது சொகுசு கார் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
