2025ஆம் ஆண்டு சரிபாதியைக் கடந்துவிட்ட நிலையில் நடப்பாண்டில் இதுவரை வெளியான படங்களின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் சசிகுமார் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது.
வெறும் 7 கோடி ரூபாயில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம், சுமார் 90 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் குவித்து நடப்பாண்டில் அதிக லாபம் ஈட்டித் தந்த இந்தியப் படமாக சாதித்துள்ளது.
அடுத்தபடியாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘டிராகன்’ படமும் நல்ல வசூலை பெற்றுள்ளது. சுமார் ரூ.37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்து வெற்றிப்படமாக அமைந்தது.
விடாமுயற்சி, தக் லைஃப் என பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த படங்கள் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் நல்ல வசூலை குவித்துள்ளது.