Saturday, December 27, 2025

உயரப்போகும் மாத சம்பளம்., மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

தற்போது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக உள்ளது. 8வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, இது ரூ.26,000 ஆக உயர வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றத்தால் சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்கள் நேரடியாகவும், 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மறைமுகமாகவும் பயனடைய உள்ளனர்.

மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பள அமைப்பை மறுசீரமைப்பதற்காக, 8ஆவது ஊதியக் குழு அமைக்க மத்திய அரசு கடந்த ஜனவரி மாதத்தில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான இறுதி ஒப்புதலும் வழங்கப்பட்டது.

ஊதியம் மற்றும் ஓய்வூதிய கட்டமைப்பில் திருத்தங்கள் செய்யும் நோக்கில், குழு தங்களது பரிந்துரைகளை 18 மாதங்களுக்குள் மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளது. இந்த பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தவுடன், ஊதியம் அதிகரிப்பது உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய ஊதியக் குழுக்கள் பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகின்றன.
முன்னதாக 7ஆவது ஊதியக் குழு 2016-இல் அமலாக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து 8ஆவது ஊதியக் குழு 2026 ஜனவரி முதல் தொடங்க உள்ளது.

Related News

Latest News