மும்பையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மைசூர் காலனி ரயில் நிலையம் வந்த மோனோ ரயில் பாதி வழியில் நின்றது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீணைப்பு வீரர்கள் பயணிகளை பத்திரமாக மீட்டனர். சுமார் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பயணிகள் மீட்கப்பட்டனர்.
இது குறித்து மோனோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில் வழக்கத்தைவிட ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் ரயிலின் எடை 109 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது என விளக்கம் அளித்துள்ளது.
