வங்கியில் பணிபுரியும் குரங்குகள்

219
Advertisement

ஆச்சரியமா இருக்கா?

உண்மைதானாம்.. எந்த ஊர்லயா இருக்கும்னு
கற்பன பண்ணியும் கண்டுபிடிக்க முடியாம
எந்த ஊர்லன்னுதான கேக்குறீங்க…

நிச்சயமா நம்ம ஊர்ல இல்லீங்க… ந
ம்ம நாட்லயும் இல்லீங்க…

தாய்லாந்து நாட்லதான் இந்த விநோதம்
நடந்திருக்குதாம்-… ஆனா…இப்ப இல்லியாம்.
பல வருஷங்களுக்கு முன்னாலயாம்.

1930 ஆம் வருஷத்துல தாய்லாந்து வங்கியில
நிறைய போலிக் காசு வர ஆரம்பிச்சுதாம்.
போலிக் காசுகள எப்படிக் கண்டுபிடிக்கறதுன்னு
தெரியாம தவிச்சுதாம். வங்கி நிர்வாகம்…
திடீர்னு ஒரு யோசனை தோணிச்சாம்..

அது என்னன்னா…

குரங்குகள வேலைக்கு அமர்த்துறதுதான்…

குரங்கு எப்படிங்க போலிக் காச கண்டுபிடிக்கும்னு
உங்கள மாதிரியே எல்லாருக்கும் சந்தேகம்
வலுத்துச்சு.

பேங்க்ல வேல பாக்கும் குரங்குகள்ட்ட வாடிக்கையாளர்கள்
தர்ற காசக் கொடுப்பாங்களாம்.., வங்கியில வேலை
செய்யற ஆபீசர்ஸ்.

கையில வாங்குன காசுகளை குரங்குகள் திங்க
முயற்சிக்கும். அதுக்காக காச கடிச்சிப் பார்க்கும்.
கடிக்க முடியலன்னதும் கீழே போட்ருமாம்.

கீழ போட்ட காச வங்கி அதிகாரிங்க எடுத்து
ஆச்சரியமா பார்ப்பாங்களாம். அந்தக் காசுல
குரங்கோட பல் தடம் இருந்தா…அந்தக் காசு
போலியாம்.

இப்படி மாசம் ஆயிரம் பவுண்டுவரைக்கும்
போலிக் காச கண்டுபிடிச்சிருக்காங்களாம்…

சரி, வேலைன்னு பாத்தா சம்பளம்னு ஒண்ணு
கொடுக்கணும்ல… ஓ..கொடுத்தாங்களாம்…

சம்பளம் மட்டுமில்லீயாம்…
பென்ஷனும் தந்தாங்களாம்.

இன்னொரு விஷயம்…

குரங்குகள் தங்குறதுக்கு குவார்ட்டர்ஸ்சும்
கொடுத்தாங்களாம்.

இது எப்படி இருக்கு?