Thursday, December 26, 2024

குழந்தையை தெரிவில் இழுத்து சென்ற குரங்கு 

வீட்டின் வெளியில் விளையாடிக்கொண்டு இருக்கும் குழந்தைகளை தெரு நாய்கள் , குரங்கு போன்ற விலங்குகள் தாக்குவது தொடர்கதை ஆகிவிட்டது.குழந்தைகளை கவனமாக  பெற்றோர்கள் தான் பாதுகாக்க வேண்டும்.

குழந்தைகளை எப்போதும் நம் பார்வையில் இருக்கும்படி இருக்க வேண்டும்.அப்படி அல்லாமல் குழந்தைகளை தனியாக விட்டு விட்டு நம் வேளைகளில் கவனம் செலுத்தும் போது தான் , குழந்தைகளுக்கு இது போன்ற ஆபத்துகள் நிகழ்கிறது.

இது போன்று மற்றொரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.தென்மேற்கு சீனாவின் சோங்கிங் அருகே உள்ள ஒரு கிராமத்தில், தெரு ஒன்றில் குழந்தை ஒன்று தனியாக விளையாடி கொண்டுஉள்ளது, திடீரென எங்கோ இருந்து  வந்த காட்டு குரங்கு, 3வயதான அந்த  குழந்தையின் பின்புறம் தாக்க,  அந்த குழந்தை நிலையைத்தடுமாறி கீழ விழுந்துவிடுகிறது.கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குழந்தையை தரதரவென இழுத்து செல்கிறது அந்த காட்டு குரங்கு.

இதனை கவனித்த அருகில் இருந்த நபர் ஒருவர் , வேகமாக ஓடிப்போய் குரங்கிடமிருந்து குழந்தையை  மீட்டார்.குழந்தைக்கு பெரிய காயங்கள் இல்லை என்றாலும் , முகத்திலும் கையில் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து தெரிவித்த அந்த சிறுமியின் தாயார், ”நான் வீட்டுக்குள் சமைத்துக் கொண்டிருந்தேன். எனது மகள் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். உடனடியாக பக்கத்து வீட்டார் வந்து தகவலை தெரிவித்தனர். பின்னர் சிசிடிவியில் பார்த்தபோது இது மிகவும் கொடூரமான விஷயமாக இருந்தது. உடனடியாக நான் இது குறித்து போலீசாரிடமும், வன அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன்’’ என கூறினார்.

குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்த குரங்கை பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.

Latest news