குரங்கு கொடுத்த பிஸினஸ்…தெலங்கானாவில் வேற லெவல் விவசாயம் !

496
Advertisement

நம்மூரில் பறவைகள், விலங்குகள், பயிரை தின்று நாசமாக்கி விடாமலிருக்க மனித உருவில், வைக்கோல் வைத்து செய்யப்பட்ட பொம்மைக்கு சட்டை பேண்ட் அணிவித்து  சோளக்காட்டு பொம்மையை வயலில் நிறுத்துவார்கள். ஆனால் அதன் மேலேயே காக்கைகள் அமர்ந்து போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும். . ஆனால் “மனுஷனுக்கு எந்த குரங்கு சார் பயப்புடுது?” என்கிறார்கள் தெலங்கானா விவசாயிகள். தெலங்கானாவில் குரங்குகள் பயிரை நாசம் செய்வதை தவிர்க்க விலங்குகளை கொண்டு வந்து நிறுத்தும் ஐடியா வெற்றி பெற்று பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள சிர்சில்லாவைச் சேர்ந்த ஜெய்பால் ரெட்டி விவசாயி, . ஒவ்வொரு ஆண்டும், அவரது நெல் அறுவடைக்கு தயாராகும் போது, ​​​​குரங்குகள் கூட்டம் அவரது வயலைத் தாக்கி பயிரை நாசம் செய்து வந்துள்ளது. இந்த நேரத்தில் அவர் ஒரு வித்தியாசமான முறையில் இறங்கி பயிர்களை காக்க முடிவு செய்து .ரூ. 14,000 செலவழித்து புலி போன்ற பொம்மையை வாங்கி தனது விவசாய நிலத்தின் நடுவில் வைத்தார். அப்படி வைத்தபிறகு குரங்குகள் உண்மையான புலி என்று நினைத்து அந்த பக்கம் வருவதை நிறுத்திக்கொண்டுள்ளன.

இந்த  ஐடியா மூலம், குரங்குகள் அவரது பயிர்களை தாக்குவதை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டது. இதே  போல சித்தி பேட்டா மாவட்டம் நாக சமுத்திரத்தை சேர்ந்த பென்சில் ஐயா என்பவர், ஜெயபாலின் ஐடியாவை இன்னும் ஒருபடி மேலே கொண்டுபோய், தினமும் கரடி போல் வேடமணிந்துக்கொண்டு தனது விளை நிலத்தை பாதுகாத்து வருகிறார் அதனை அணிந்துகொண்டு வயலில் நடந்து செல்வதற்காக ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய் கொடுத்து நியமித்துள்ளேன். ஆனால் பயிர்கள் வீணாக போவதை விட இந்த செலவு பெரிதல்ல. இதன்மூலம் என் நிலம் மட்டுமல்ல, பக்கத்து நிலமும் கூட பாதுகாக்கப் படுகிறது” என்று கூறுகிறார். இப்போது கரடி வேஷம் போட சம்பளத்துக்கு ஆள் தேடி வருகிறார்களாம் அந்த ஊர் விவசாயிகள்.இந்த இருவரை குறித்தும் அவரவர் கிராமங்களில் பொதுமக்கள் பெரியளவில் பேசி வருகின்றனர்.