இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக 10 செயற்கைக்கோள்கள் மூலம் கண்காணிப்பு பணி நடப்பதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் நடைபெற்ற மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் 5வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முக்கியமான நோக்கத்திற்காக குறைந்தது 10 செயற்கைக்கோள்கள் இரவு பகலாக தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.
7 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள கடலோரப் பகுதிகள் முழுவதையும், வடக்கு எல்லைப் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது கட்டாயம் என்றும் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.