தென்காசியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரயிலில் கடத்த முயன்ற 34 லட்சத்திற்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தென்காசி வழியாக செல்லும் கொல்லம்-சென்னை எழும்பூர் ரயிலில் புனலூர் ரயில்வே போலீசார் சோதனை நடத்தியபோது, பொது பெட்டியில் பயணித்த அப்துல் அஜீஸ் என்பவர் 30 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதே ரயிலில் ஸ்லீப்பர் வகுப்பில் நடத்தப்பட்ட சோதனையில் கொல்லத்தைச்சேர்ந்த பாலாஜி என்பவர் சுமார் 4 லட்சம் வைத்திருந்தது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.