Sunday, May 11, 2025

உணவுப்பழக்கத்தால் ஆயுள் தண்டனை பெற்ற தாய்!

கடுமையான உணவு பழக்கவழக்கத்தால் பெற்ற பிள்ளையின் உயிரை , பெற்ற தாயே காவுவாங்கியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள  ஃபுளோரிடா மாகாணத்தில் கேப் கோரலில் என்னும் இடத்தில்  இந்த சம்பவம்  நிகழ்ந்துள்ளது.ஷீலா ,ரைய் என்னும் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதிகள் கடந்த சில வருடங்களாகவே வீகன் உணவு பழக்கத்தை தீவிரமாக கடைபிடித்து வந்துள்ளனர் அதாவது வேகன் டயட் என்பது சைவ உணவை அடிப்படையாகக் கொண்ட டயட் முறையாகும்.

தங்களுடன் சேர்த்து இந்த தம்பதி தனது நான்கு குழந்தைகளுக்கும் இந்த வீகன் முறைப்படி உணவளித்துவந்துள்ளனர்,பிறந்து 18 மாதங்களே ஆனா நான்காவது ஆண்குழந்தை எஸ்ராவிற்கு தாய்ப்பாலூட்டியதோடு மாம்பழம், ஆப்பிள் போன்ற பழங்கள், பச்சை காய்கறிகளை மட்டுமே கூடுதல் உணவாகப் பெற்றோர் அளித்துள்ளனர்.

ஊட்டச்சத்து குறைப்பாட்டால் மெலிந்த அந்தக் குழந்தை 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூச்சுத் திணறி இறந்ததாக கூறப்படுகிறது ,மருத்துவர் மற்றும் போலீஸ் விசாரணையில் அனைவரையும் அதிர்ச்சியடையும்படி தகவல் வெளியாகியுள்ளது.

அந்தக் குழந்தை இறந்தபோது  ஏழு மாத குழந்தையின் அளவில் இருந்தது,பெற்றோர் தங்கள் குழந்தைகளை கடுமையான வீகன் உணவு முறைக்கு பழக்கப்படுத்தியுள்ளனர் ஆகையால்தான் அந்த குழந்தை உயிரிழந்துள்ளது என்று  தகவல் வெளியாகி உள்ளது  கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், தற்பொழுது தாய்க்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

Latest news