முதல் படம் ரிலீஸ் ஆக சில நாட்களுக்கு முன் இறந்த இயக்குனர்! சோகத்தில் திரையுலகம்

42
Advertisement

2004ஆம் ஆண்டு சபு ஜேம்ஸ் இயக்கிய ‘I am Curious’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஜோசப் மனு ஜேம்ஸ்.

மலையாளம், கன்னட மற்றும் ஹிந்தி மொழிப் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த ஜோசப், நான்சி ராணி (Nancy Rani) என்ற படத்தை இயக்கி வந்தார்.

இது இவர் இயக்குனராக இயக்கும் முதல் படம் ஆகும். இந்நிலையில்,  ஹெபடைடிஸ் நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த ஜோசப், பிப்ரவரி 24ஆம் தேதி தனது 31வது வயதில் காலமானார்.

Advertisement

Nancy Rani திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜோசப்பின் இறப்பு மலையாள திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. படத்தில் நடித்த அஜூ வர்கீஸ் மற்றும் அஹானா கிருஷ்ணா தங்கள் இரங்கல்களை பதிவு செய்துள்ளனர்.