Wednesday, April 30, 2025

இந்திய ராணுவத்துக்கு மோடி கொடுத்த பவர்! பதறி பதுங்கும் பாகிஸ்தான்! சூழும் போர் மேகங்கள்! ஆட்டத்தை திருப்பிய அமெரிக்க மெசேஜ்

உச்ச கட்ட போர் பதற்றம்… உயர்மட்ட அவரச கூட்டங்கள்… பிரதமரின் கண்ணசைவுக்கு காத்திருக்கும் ராணுவம்… உலகத்தால் உற்றுநோக்கப்படும் இரண்டு நாடுகள்… கடந்த சில நாட்களாக கண்களுக்கு முன்னால் மாறி மாறி வந்து நிற்கும் காட்சிகள் இவைதான்.

உண்மை தான்… இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. காஷ்மீரின் பஹல்காமில் கடந்த வாரம் 26 பொதுமக்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு பலியாக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அதிகாரம் கொடுத்துள்ளார்.

“அழிவுக்கேதுவான அடியை தீவிரவாதத்திற்கு கொடுப்பதற்கான முழு அதிகாரத்தை உங்களுக்கு தருகிறோம். இந்திய ஆயுதப் படைகளின் திறன்களில் எனக்கு முழு நம்பிக்கையை உள்ளது. உங்களுக்கு ராணுவ தாக்குதல் திட்டமிடலில் முழு அதிகாரம், சுதந்திரத்தை தருகிறோம்” என்று முழு செயல்பாட்டு சுதந்திரத்தை இந்திய ராணுவத்துக்கு இந்திய பிரதமர் கொடுத்திருக்கிறார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் மூலை முடுக்கெல்லாம் போர் பதற்றம் உச்ச கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இரண்டு நாடுகளுக்கும் அமெரிக்கா முக்கியமான மெசேஜ் ஒன்றை அனுப்பி உள்ளது. அமெரிக்க உள்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அளித்த பேட்டியில், “பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே தேக்கத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர ஆலோசனைகள் மூலம் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும். நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

இரண்டு நாடுகளுமே அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகள். இரண்டு நாடுகளின் கைகளின் அணு ஆயுதம் இருப்பதை விட அவை அருகருகே இருக்கும் நாடுகள் என்பதால் அணு ஆயுதம் ஏந்திய இரு அண்டை நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறி இருப்பது தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.

Latest news