பாஜகவில் 75 வயது நிறைவடைந்துவிட்டால் எந்த ஒரு பதவியிலும் நீடிக்க முடியாது என்பது நடைமுறை. அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டு 75 வயது நிறைவடைகிறது. இதனால் பிரதமர் பதவியில் மோடி தொடர்ந்து நீடிப்பாரா? என்கிற விவாதம் அவ்வப்போது எழுகிறது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் எம்பி மும்பையில் செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி நேற்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு சென்றார். ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்களிடம் தெரிவிக்கவே அவர் அங்கு சென்றாரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடியின் ஓய்வுக்குப் பின்னர் புதிய பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ரகசிய ஆலோசனை நடத்தினர். பிரதமராக உள்ள மோடிக்குப் பின்னர் நாட்டின் புதிய பிரதமராக மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரே தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார். அவரது இந்த பேட்டி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.