பணக்குவியல் விவகாரத்தில் சிக்கிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவியில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த மார்ச் 14-ம் தேதி இரவு யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஏராளமான ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டாக இருந்தது தெரிய வந்தது. இந்த ரூபாய் நோட்டுக்களுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று நீதிபதி யஷ்வந்த் வர்மா மறுத்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் மழைக்கால கூட்டத் தொடரில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்கம் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.