தற்போது உள்ள காலத்தில் மக்கள் பலரும் ’போன் பே’ (Phone pe), ‘ஜி பே’ (Gpay) மூலம் பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை இந்த வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நியாயவிலைக் கடைகளில் பணபரிவர்த்தனை மேற்கொள்ளும் ஆப்கள் (APP) இதுவரை பயன்பாட்டில் இல்லை.
ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு ரொக்கமாக பணம் பெறப்படும், இதனால் சில நேரங்களில் கடைகளில் சில்லரை பிரச்சனை ஏற்படுகிறது. இந்நிலையில், இந்த பிரச்சனைகள் ஏற்படாத வகையில் “மொபைல் முத்தம்மா” (Mobile Muthamma) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பயனாளர்கள், நியாயவிலைக் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கான பணத்தை QR கோடு மூலம் ஸ்கேன் செய்து UPI மூலம் செலுத்தலாம். இது நேரடியாக அரசுக்கு சென்றடைகின்றனர். இதனால் முறைகேடுகள் தடுக்கப்படும்.
இந்த திட்டமானது முதலில் சென்னையில் உள்ள சில கடைகளில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைக்களில் ‘மொபைல் முத்தம்மா’ திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.
