பேரறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை வாலாஜா சாலையில் இருந்து அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளானோர் பங்கேற்றனர்.
அண்ணா சதுக்கத்தில் பேரணி நிறைவடைந்ததும், அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கருணாநிதி நினைவிடத்திலும் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.