பீகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ராகுல் காந்தி நடத்தி வரும் யாத்திரையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் பாஜகவுடன் சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். பீகாரில் லட்சக்கணக்கில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட காரணத்திற்காக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ‘வாக்காளர் உரிமை யாத்திரை’ என்ற பெயரில் யாத்திரையை தொடங்கியுள்ளார்.
இந்த யாத்திரை செப்டம்பர் 1ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் பொதுக்கூட்டத்துடன் நிறைவடைகிறது. இந்தநிலையில் வரும் 27ஆம் தேதி இந்த யாத்திரையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
