ரஷ்யாவில் இருந்து சீனாவுக்கு சென்ற AN – 24 விமானம் மாயமானதாக தகவல் வெளியானது. இந்த விமானத்தில் 50 பேர் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் அதில் பயணம் செய்த 49 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவின் எல்லை அருகேவுள்ள ஆமூர் பகுதியில் விமானம் சென்று கொண்டிருந்தபோது, அதன் தொடர்பை விமானக் கட்டுப்பாட்டு அறை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தைண்டாவுக்கு 15 கிலோ மீட்டர் தொலைவில், ஒரு சரிவானப் பகுதியில், விமானம் சிதறுண்டு கிடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.