திருத்தணியில் மழைநீர் வடிகால்வாயை காணவில்லை என சினிமா பாணியில் வட்டாட்சியரிடம் வழக்கறிஞர் மனு அளித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் சித்தூர் சாலையில் 20 அடி அகலம் கொண்ட மழைநீர் வடிகால்வாய், கட்டிட் ஆக்கிரமிப்பாளர்கள் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தணி வட்டாட்சியர் மலர்விழியிடம், வழக்கறிஞர் சிவசங்கர் கோரிக்கை வைத்தார்.
ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள ஏரி கால்வாயை காணவில்லை என்று சினிமா பாணியில் புகாரளித்தார். விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பொதுநல வழக்கு தொடுக்க போவதாக வழக்கறிஞர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.