இந்திய ராணுவம் அக்னி-Prime எனப்படும் இரண்டாம் தலைமுறை இடைநிலைத் தாக்குதல்கூடிய ஏவுகணையை ரயிலிலிருந்து வெற்றிகரமாக சோதித்துள்ளது. இதை பற்றி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, ‘இந்த ஏவுகணைக்கு சுமார் 2,000 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இலக்குகளை துல்லியமாக அழிக்கும் திறன் உள்ளது. நேற்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரயிலிலிருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது’ என்றும் கூறினார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான DRDO அக்னி-பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்தச் சாதனைக்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.
சுமார் 2,000 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அக்னி-பிரைம், இந்த முறை முதல் முறையாக ரயிலில் பொருத்தப்பட்ட மொபைல் லாஞ்சரிலிருந்து ஏவப்பட்டது. மிகச்சிறப்பாக நடைபெற்ற இந்த சோதனை, இந்திய பாதுகாப்புத் துறைக்கு ஒரு புதிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ரயிலிலிருந்து முன்னோட்ட ஏற்படுகள் இல்லாமல் இந்த சோதனை சாத்தியமானது. இதனால் ராணுவத்திற்கு இது துரித நடவடிக்கை எடுக்கும் திறனை அளிக்கிறது. இந்த முயற்சியின் மூலம் இந்தியா, ரயில் அடிப்படையிலான ஏவுதல் அமைப்பைக் கொண்ட சில நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது.
இந்தச் சோதனையை வெற்றிகரமாக நடத்திய DRDO விஞ்ஞானிகளும் ஆயுதப்படைகளும் பாராட்டுக்குரியவர்கள் என ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த வெற்றிகரமான சோதனை இந்தியாவின் பாதுகாப்பு வலிமையை உலக அரங்கில் உயர்த்தி நிறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளில் முக்கியமான இடம் வகிக்கும் அக்னி-பிரைம், மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடனும் துல்லியமான தாக்குதல்திறனுடனும் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம். இவ்வாறு வெற்றி பெற்ற இந்தச் சோதனை, எதிர்கால பாதுகாப்புத் திட்டங்களில் இந்திய ராணுவத்துக்கு வலிமையான ஆயுதமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.