கேரள மாநிலம் மலப்புரம் அருகே கோட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்ற போது, கூகுள் மேப்பை நம்பி சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக பாலகிருஷ்ணனின் கார் ஆற்றில் பாய்ந்தது.
அதை பார்த்த பின்னால் வந்து கொண்டிருந்த உறவினர்கள், விரைந்து சென்று அனைவரையும் மீட்டனர். இதே பகுதியில் இதற்கு முன்பும் விபத்து நடந்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.