வேலை சுமை, வீட்டு பிரச்சனை என பல்வேறு காரணங்கள் காரணமாக இந்த மன அழுத்தம் ஏற்படுகின்றன. இதனை சரி செய்ய நீங்கள் தினசரி காலையில் புதினா டீ அருந்தலாம்.
புதினாவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. அவற்றை டீயில் சேர்த்து தினமும் குடித்து வருவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இதை பார்ப்போம்.
சளி இருமலை தடுக்கும்
பருவகால மாற்றத்தில் மழை மற்றும் குளிர்காலங்களில் புதினா டீ குடிப்பது சளி தேக்கத்தை கட்டுப்படுத்த உதவும். மேலும் இருமல் மற்றும் தொண்டைபுண் போன்றவற்றை போக்க உதவும்.
செரிமான பிரச்சனைகள்
புதினா டீ வயிற்றில் உள்ள செரிமான பிரச்சனைகளை சரி செய்யும். மேலும் நமது வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கவும் புதினா டீ உதவுகிறது.
உடல் எடை குறையும்
தினமும் புதினா டீ குடித்து வந்தால் உடல் எடை குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் புதினா டீ குடித்து வரலாம்.
சுவாச புத்துணர்ச்சி
தினாவில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் உள்ளன. புதினா டீயை தினசரி அருந்துவதன் மூலம் நமது சுவாசம் புத்துணர்ச்சி அடைகிறது.
குறிப்பு
உடல் நல குறைபாடு உள்ளவர்கள், மருந்துகள் எடுப்பவர்கள் தினசரி புதினா டீயை குடிப்பதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.