சென்னை அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு பகுதியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய மீன் மார்க்கெட்டினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.
மீன் விற்கும் தொழில் செய்யும் பெண்களுக்கு மீன் கூடை மற்றும் தார்பாய்கள் உள்ளிட்ட அவர் வழங்கினார். இந்த மீன் மார்க்கெட்டில் மொத்தம் 89 மீன் கடைகளும் 40-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன் மார்க்கெட் உரிமையாளர் சதீஷ்குமார், “89 கடைகள் அமைக்கப்பட்டுள்ள இந்த மீன் மார்க்கெட்டில் தமிழகம் மட்டும் இன்றி வெளிமாநிலங்களை சேர்ந்த மீன்களும் விற்பனை செய்யப்படும். சில்லறை மற்றும் மொத்த விற்பனையில் மீன்கள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன.
மீன் கடைகள் மட்டுமின்றி காய்கறி கடைகள் உணவகங்கள் நீட்டவையும் இங்கு உள்ளன. நீங்கள் அனைத்தும் உற்சாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன” என்று தெரிவித்தார்.