கோவை கற்பகம் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு வங்கி கடன் வழங்கும் விழாவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் அமலாக்கத்துறை சோதனை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் “சில இடங்களில் இன்னும் ரெய்டுகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது முடிந்த உடனே இதற்கு நான் நிச்சயம் பதில் கூறுகிறேன்” என்று கூறினார்.
டாஸ்மாக்கில் ஊழல் நடக்கிறது என்றும், செந்தில் பாலாஜி என புத்த பிட்சுவா என்று பா.ஜ.க தலைவர் கூறுகிறார் என்ற கேள்விக்கு, அரசியல் கோமாளி உடைய கேள்விகளை, முன் வைக்காதீர்கள் என்று நான் ஏற்கனவே பத்திரிக்கையாளர்களிடம் கூறி இருக்கிறேன். அவர் ஒரு அரசியல் கோமாளி. காலையில் ஒரு செய்தி மதியம் ஒரு செய்தி இரவில் ஒரு செய்தி என, தெளிவான முடிவில் இருப்பதை இல்லை என அவர் பதிலளித்தார்.