பா.ஜ.க-வை அனைத்து தொகுதிகளிலும் தமிழக மக்கள் டெபாசிட் இழக்க செய்வார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், உலகிற்கே நாகரீகத்தை கற்பித்த தமிழனுக்கு, பா.ஜ.க பாடம் எடுக்க வேண்டாம் என்று தெரிவித்தார். திமுக வீண் சண்டைக்கு போவதில்லை, வந்த சண்டையை விடுவதில்லை என்றும் அமைச்சர் சேகர்பாபு ஆவேசமாக பேசினார்.