சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் பொன் பொடி வரும் மார்ச் 19ஆம் தேதி நேர இராஜராக வேண்டும் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006 – 2011 திமுக ஆட்சியின் போது விழுப்புரத்தில் செம்மண் வெட்டி எடுத்தது தொடர்பான வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்தது.
விழுப்புரத்தில் செம்மண் வெட்டி எடுத்ததில் அரசுக்கு ரூ. 28.36 கோடி இழப்பு என லஞ்ச ஒழிப்புத் துறை கூறியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மார்ச் 19 ஆம் தேதி பொன்முடி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.