பெண்கள் குறித்தும் சைவம் வைணவம் குறித்தும் ஆபாசமாக பேசியதால் அமைச்சர் பொன்முடி மீது கடும் கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து அவர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அமைச்சர் பதவியில் இருந்தும் பொன்முடியை நீக்குவது தொடர்பாகவும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தனது பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளார் அமைச்சர் பொன்முடி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி தான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக என குறிப்பிட்டுள்ளார்.
மனம் புண்பட்ட அனைவரிடமும் தான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் பொன்முடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.