எந்த விதிமீறலும் இல்லை – அண்ணாமலையின் புகாருக்கு பதில் அளித்த அமைச்சர்

280

ஜி.ஸ்கொயர் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு CMDA – அனுமதி வழங்கியதில் எந்த விதிமீறலும் இல்லை என்று, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி, அண்ணாமலையின் புகாருக்கு பதில் அளித்துள்ளார்.

வீட்டு வசதித்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஆகியவற்றில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளி்த்த புகாருக்கு, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி இன்று பதில் அளி்ததார்.

இதையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர வளர்ச்சிக்குழும அலுவலகத்தில் அமைச்சர் அளித்த பேட்டியில், கோவையைச் சேர்ந்த ஜி- ஸ்கொயர் நிறுவனத்திற்கான CMDA அனுமதி வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட அனுமதியின் கீழ்தான் பணிகள் நடைபெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 1976-ம் ஆண்டு முதல் சி.எம்.டி.ஏ.-வுக்கு தலைமை நிர்வாகி நியமிக்கப்பட்டு வருவதாகவும், அண்ணாமலை கூறியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும் அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்தார்.