டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் 2-வது நாளாக சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க. ஆட்சியில் பதிந்த வழக்கை தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற முறைகேடு போல் சித்தரிப்பதற்காக ரெய்டு நடைபெறுகிறது.
எந்த ஆதாரமும் கிடைக்காததால் ரூ.1,000 கோடி ஊழல் என கற்பனை செய்தியை அமலாக்கத்துறை வெளியிட்டது. வெளியிட்ட தவறான அறிக்கையை நியாயப்படுத்த ED டாஸ்மாக் நிறுவன ஊழியர்களை தொடர்ந்து துன்புறுத்துகிறது என அவர் கூறியுள்ளார்.