Monday, December 30, 2024

‘லியோ’ படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்படுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

விஜயின் 67வது படமான ‘லியோ’ படப்பிடிப்புக்காக லோகேஷ் கனகராஜ், விஜய், த்ரிஷா மற்றும் படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர்.

படம் LCUவில் வருமா stand alone படமாக இருக்குமா, உண்மையில் விஜய் படத்தில் gangsterஆ இல்லை ஏதேனும் ட்விஸ்ட் இருக்குமா என லியோ படம் இணையத்தில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் கட்ரா பகுதியில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

துருக்கியை தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில், இந்த சூழலால் காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு நிறுத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

‘வாரிசு’ படத்திற்கு பிறகு லோகேஷ் படத்தில் விஜய் நடிப்பதால் நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள், தற்போது ஏற்பட்டுள்ள இடையூறால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Latest news