Saturday, March 15, 2025

ஸ்கைப் செயலியின் சேவையை நிறுத்த மைக்ரோசாப்ட் முடிவு

2003-ம் ஆண்டு ஸ்கைப் என்ற செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. வீடியோ, ஆடியோ அழைப்புகள் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது.

ஸ்கைப் செயலி 50 மில்லியன் பயனாளர்களை எட்டி சாதனை படைத்திருந்தது. இந்நிலையில், ஸ்கைப் செயலியின் சேவை மே 5-ம் தேதியுடன் நிறுத்தப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்கைப் செயலுக்கு பதிலாக மைக்ரோசாப்ட் டீம் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கைப் பயனாளர்கள் தங்கள் விவரங்களை Microsoft Teams-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Latest news