அமெரிக்க ஊடகத்தின் அறிக்கையின் படி, சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் 1985 பேர் வாஷிங்கடனை சேர்ந்தவர்கள் ஆவர்.
மாற்றமடைந்து வரும் சந்தையில் வெற்றி பெற நிறுவனத்தை சிறப்பாக நிலைநிறுத்த தேவையான மாற்றங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆண்டு தனது 50வது ஆண்டு நிறைவை கொண்டாட உள்ளது.