Thursday, December 4, 2025

மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலியில் இருந்து டிசம்பா் 7-ஆம் தேதி முதல் ஜனவரி 25-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து டிசம்பா் 8-ஆம் தேதி முதல் ஜனவரி 26-ஆம் தேதி வரை இரவு 7.45 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06029) மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.

இந்த ரயிலானது கோவை, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, பாவூா் சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News