META என்னும் புதிய உலகிற்கு அழைத்து செல்லும் facebook

395
meta
Advertisement

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான பேஸ்புக் இன்க், meta என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு நம்மை புதிய இணைய வழி மெய் நிகர் உலகிற்கு அழைத்து செல்ல இருப்பதாக, அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

META verse என்றால் என்ன?

VR (Virtual Reality)தொழில்நுட்பமே META என்னும் தொழில்நுட்பம் உருவாக காரணம். நிஜ உலகைப் போலவே விர்ச்சுவலாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு உலகமே META .

நிஜ வாழ்க்கையில் செய்ய முடிந்த, முடியாத செயல்களை எல்லாம் விர்ச்சுவல் உலகில் செய்யலாம். மெட்டாவெர்ஸூக்கு இந்த உலகம் அளித்திருக்கக்கூடிய பொருள் இதுதான் .

இந்த புதிய தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்தவே, பல முன்னனி நிறுவனங்களின் தலைவர்கள் முயன்று வருகின்றனர், அதில் facebook நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உம் முக்கியமான ஒருவர்.

ஃபேஸ்புக் நிறுவனம் மெட்டாவெர்ஸ் திட்டத்தை செயல்படுத்த 10 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து ஆயிரக்கணக்கான பனியாளர்களை பணியமர்த்தியுள்ளது

META verse மூலம் என்னென்ன செய்யலாம்… நிஜ உலகில் நம்மால் செய்ய முடியாத அனைத்தையும் meta verse மூலம் செய்யலாம்,
avatar கண்ணாடியின் மூலம் வீட்டிலிருந்து பணிபுரியும் போதே அலுவலகத்தில் பணிபுரியும் அனுபவத்தை விர்ச்சுவலாக பெற முடியும், இணையத்தில் வாங்கும் உடைகளையும் இணையத்திலே விர்ச்சுவலாக அணிந்து பார்த்து வாங்க முடியும்.

தற்போது வீடியோ கால் மூலமாக நாம் பேசும் அனைவரையும் அதே வீடியோ கால் மூலமாகவே விர்ச்சுவலாக நேரில் பார்க்க முடியும்.
நாம் நேரில் பார்க்கும் திரைப்படம், கலைநிகழ்ச்சி, மாநாடு போன்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் நேரில் பார்ப்பது போன்றே இணையத்திலும் பார்க்கலாம்.

இல்ல விழாக்களுக்கு வர முடியாதவர்கள், META verse மூலம் விர்ச்சுவல் கெஸ்ட் ஆக நேரில் பங்கேற்பது போல் பங்கேற்கலாம். இது போல் பல வியக்க வைக்கும் திட்டங்களை உள்ளடக்கிய META verse இணையத்தின் அடுத்த கட்டமாக இருக்கும், அந்த அடுத்த கட்டத்தின் ஒரு பகுதியை தான் உருவாக்க வேண்டும் எனத் தீவிரமாக இருக்கிறார் மார்க்.

அதன் வெளிப்பாடாகவே ஃபேஸ்புக்கின் META என்ற பெயர் மாற்றம் உள்ளது.