Thursday, July 31, 2025

மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவராக அருண் ஸ்ரீனிவாஸ் நியமனம்

மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைவர் பதவிக்கு அருண் ஸ்ரீனிவாஸ் அவர்களை நியமித்துள்ளது. அருண் ஸ்ரீனிவாஸ் 2025 ஜூலை 1 முதல் தனது புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.

இந்த புதிய பொறுப்பில், அருண் ஸ்ரீனிவாஸ் மெட்டாவின் வணிகம், புதுமை மற்றும் வருமான முன்னுரிமைகளை இந்தியாவில் உள்ள பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவை செய்யும் வகையில் ஒருங்கிணைப்பார்.

அருண் ஸ்ரீனிவாஸ் தற்போது இந்தியாவில் விளம்பரத் துறையின் இயக்குனராக பணியாற்றி வருகிறார். 2020-ஆம் ஆண்டு மெட்டாவில் சேர்ந்த பிறகு, AI, ரீல்ஸ் மற்றும் மெசேஜிங் போன்ற முக்கிய வருமான ஆதாரங்களை முன்னெடுத்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

மொத்தம் 30 ஆண்டுகளுக்கு மேல் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் அனுபவம் கொண்ட இவர், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ரீபாக், ஓலா, வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் போன்ற முன்னணி நிறுவனங்களில் உயர் நிர்வாகப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News