குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

273
Advertisement

அன்றாட வாழ்க்கையில் திறம்பட செயல்படுவதற்கும் மறதியால் ஏற்படும் பல சிக்கல்களை தவிர்க்கவும் வலுவான ஞாபக சக்தி அவசியம்.

அதிலும், குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றல் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு முறையினாலேயே அமைகிறது.

அதனாலேயே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவளிப்பதன் முக்கியத்துவத்தை மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

குழந்தைகளின் ஞாபகத்திறன் மற்றும் சீரான மூளை வளர்ச்சிக்கு எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என இத்தொகுப்பில் காண்போம்.

பாலக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கைக்கீரை, கொத்தமல்லி ஆகிய கீரை வகைகளில் இருக்கும் Folate, A, B, E, K மற்றும் C வகை விட்டமின்கள், மினெரல்ஸ், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

மூளைக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தான ஒமேகா 3, விட்டமின் B6, B12, புரதச்சத்து கிடைக்க முட்டை மற்றும் மீன் வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், சிங்க், இரும்பு மற்றும் விட்டமின் C சத்துக்கள் நிரம்பிய பெர்ரி வகை பழங்களை சாப்பிடுவதை வழக்கமாக்க வேண்டும். மேலும் வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா, வால்நட், சியா போன்றவற்றை  உட்கொண்டு வந்தால் குழந்தைகள் மேம்பட்ட செயல்திறனுடன் செயல்படுவார்கள் என  மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.