Wednesday, February 19, 2025

வெடித்து சிதறிய ஏசி : தூங்கிக்கொண்டுருந்த மருத்துவ பேராசிரியர் பலி

சென்னை பல்லாவரம் அடுத்த, ஜமீன்பல்லாவரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தனலட்சுமி, சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் பேராசியராக பணிபுரிந்து வந்தார். இவர் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தபோது, ஏசி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது, இதில் தீக்காயம் மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டு தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest news