Thursday, July 31, 2025

கனவுகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட மருத்துவ தம்பதி குடும்பத்துடன் பலி

கனவுகளை சுமந்து கொண்டு லண்டனுக்கு புறப்பட்ட மருத்துவ தம்பதி, 3 குழந்தைகளுடன் உயிரிழந்த சம்பவம், மனதை ரணமாக்கியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரதீப் ஜோஷி என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக லண்டனில் மருத்துவராக பணியாற்றி வந்தார், இவரது மனைவி கோனி வியாஸ் உதய்பூரில் மருத்துவராக வேலை செய்த நிலையில், லண்டனுக்கு குடிபெயரும் ஆசையோடு கடந்த 2 நாட்களுக்கு முன் வேலையை ராஜினாமா செய்தார்.

பல கனவுகளோடு, 3 குழந்தைகளுடன் விமானத்தில் பயணித்த மருத்துவ தம்பதி, கோர விபத்தில் உயிரிழந்தனர். புது வாழ்க்கையை ஆரம்பிக்கும் மகிழ்ச்சியில், அவர்கள் விமானத்தில் குடும்பமாக எடுத்து கொண்ட செல்ஃபி, அவர்களின் கடைசி நினைவாக மாறியது. இத்துயரமான சம்பவம் மனதை நொறுங்க செய்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News