சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மாற்றான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை எடுக்க திட்டம் தீட்டி வருகிறது. அப்படி எடுக்கப்படும் வீரர் கேப்டன் மெட்டிரியலாகவும் இருந்தால் இன்னும் பெட்டர் என்பது தான் CSKவின் எண்ணமாக உள்ளது.
இதற்காக Trading முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் மற்றும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை எடுக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சாம்சனை விட்டுக்கொடுக்க ராஜஸ்தானும் ரெடி தான். பதிலுக்கு ருதுராஜ், ஜடேஜா இருவரில் ஒருவரை கொடுக்குமாறு கேட்கிறதாம். இதனால் தான் சாம்சன் சென்னைக்கு வருவது தள்ளிப்போகிறது.
இதற்கிடையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கும் சாம்சனுக்கு வலைவீச, இதனால் அவருக்கு எக்கச்சக்க டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் என்பதால் அவரை எப்படியும் அணிக்குள் கொண்டு வர முடிவுசெய்த, CSK தற்போது மும்முனை போட்டியில் சிக்கிக்கொண்டு விட்டது.
இந்தநிலையில் ஒருவேளை சஞ்சு சாம்சனை எடுக்க முடியவில்லை என்றால், அணியில் இருக்கும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் உர்வில் படேலை தோனிக்கு மாற்று வீரராக களமிறக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம். தொடருக்கு நடுவே மாற்று வீரராக உள்ளே வந்த உர்விலிடம், அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய திறமையும் இருக்கிறது.
இதனால் விக்கெட் கீப்பராக மட்டுமின்றி பினிஷராகவும், உர்வில் படேலை களமிறக்கி ஆட வைக்கும் திட்டத்தில் சென்னை இருப்பதாக தெரிகிறது.