19.05.2026; மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற-இறக்க நிலை நீடித்து வருகிறது. வாரத்தின் தொடக்க நாளான நேற்று தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. அப்போது ஒரு கிராமுக்கு ரூ.14,750-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,000-க்கும் விற்பனையாகியது.

இந்நிலையில் இன்று தங்கம் விலையில் திடீர் உயர்வு பதிவாகியுள்ளது. அதாவது, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.1,18,960 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.120 உயர்ந்து ரூ.14,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்க திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றம் மற்றும் உலக பொருளாதார சூழ்நிலைகள் போன்ற காரணங்களால் தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வரும் நாட்களிலும் விலையில் மாற்றம் இருக்கலாம் என சந்தை வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Related News

Latest News