Sunday, August 3, 2025
HTML tutorial

அடுத்தடுத்து 3 வீரர்களுக்கு ‘அழைப்பு’  RCB-க்கு எதிராக ‘மாஸ்டர்’ பிளான்

ஏறக்குறைய இத்தனை ஆண்டுகளாக கட்டிக்காத்து வந்த புகழை, ஒரே சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பறிகொடுத்து நிற்கிறது. 2020ம் ஆண்டுக்கு பிறகு மிகவும் மோசமானதொரு ஆண்டாக, CSKவிற்கு இந்த 2025 அமைந்துள்ளது.

இந்தநிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ள, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மாஸ்டர் பிளான் ஒன்றை முன்னெடுத்துள்ளது. T20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில், அதிவேக சதமடித்த குஜராத் வீரர் Urvil Patelஐ trialsக்கு அழைத்துள்ளது.

trialsல் அவரின் ஆட்டம் சென்னை அணி நிர்வாகத்தை மிகவும் Impress செய்து விட்டதாம். இதனால் அடுத்த ஆட்டத்தில் அவர் விளையாடுவார் என்று தெரிகிறது. இதேபோல ஆல்ரவுண்டர் Aman Khan மற்றும் கேரள பேட்ஸ்மேன் Salman Nizar இருவரும், trialsல் பங்கு பெற்றுள்ளனர்.

ஏப்ரல் 27,28ம் தேதிகளில் சென்னை அணி நடத்திய Trialsல், மேற்கண்ட மூவருமே பங்கு பெற்றுள்ளனர். மூவரில் Urvil Patel விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News