சென்னை அடுத்த மறைமலை நகரில் BENZ பேக்கிங் என்கிற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது இதில் பெரிய அளவிலான பாலத்தின் கவர் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது சுமார் 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் வழக்கம் போல நள்ளிரவு ஊழியர் ஒருவர் மோட்டார் சுவிட்ச் போட்டுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக மின்சார கோளாறு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது
உடனடியாக அந்த தீ மல மல வென பரவி நிறுவனம் முழுவதும் கொழுந்து விட்டு எறிய தொடங்கியது உடனடியாக தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் மற்றும் மகேந்திரா சிட்டி தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் முழு வீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர்
சுமார் ஏறத்தாழ 70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. பாலித்தீன் கவர் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மறைமலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்
சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தீ கொழுந்து விட்டு எரிவதால் இந்த பகுதி முழுவதுமே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்