Thursday, May 22, 2025

மெக்சிகோவில் டீசல் ஆலையில் பயங்கர தீ விபத்து

மெக்சிகோவின் நியூவோ லியோனில் உள்ள டீசல் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து தொடர்பான பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

மெக்சிகோவின் நியூவோ லியோனில் இயங்கி வரும் டீசல் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, டீசல் பேரல்கள் வெடித்து சிதறியதில் ஆலை முழுவதும் தீப்பிழம்பாக காட்சியளித்தது.

நீண்ட நேரம் கொளுந்து விட்டு எரிந்த தீயைத் தொடர்ந்து வானுயரத்திற்கு கரும்புகை எழுந்ததால் கூடுதல் பரபரப்பு நிலவியது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில், 11 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த பயங்கர தீ விபத்து தொடர்பான அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.

Latest news