Thursday, January 8, 2026

மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை கடந்த சில வாரங்களுக்கு முன்பு எச்சரித்தது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related News

Latest News