மாருதி சுசூகியின் அதிரடி ஆஃபர்., ரூ. 2.15 லட்சம் வரை தள்ளுபடி

மாருதியின் இன்விக்டோ, ஜிம்னி மற்றும் பிரான்க்ஸ் கார் மாடல்களுக்கு டிசம்பர் மாதத்துக்கான தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இன்விக்டோ காருக்கு ரூ. 2.15 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ. 1 லட்சம் வரை ரொக்கத் தள்ளுபடி மற்றும் ரூ. 1.15 லட்சம் வரை ஸ்கிராப் அல்லது எக்சேஞ்ச் போனஸ் அடங்கும்.

சியாஸ் கார் இந்திய சந்தையில் விலக்கி வைக்கப்பட்டாலும், உள்ள ஸ்டாக் வரை விற்பனை நடைபெறும். இந்த காருக்கு ரூ. 1.3 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது மற்றும் அனைத்து வேரியண்டுகளுக்கும் இந்த சலுகை செல்லும்.

மாருதி ஜிம்னி மாடலுக்கு ரூ. 1 லட்சம் வரையிலும் தள்ளுபடி உள்ளது.

இக்னிஸ் காருக்கு ரூ. 80,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

பலேனோ மற்றும் XL6 மொடல்களுக்கு ரூ. 60,000த் தள்ளுபடி வழங்கப்படும்.

இந்த தள்ளுபடிகள் வாங்க விரும்பும் பயனாளிகளுக்கு நல்ல சலுகைகளை தருவதுடன், கார்களுக்கான செலவுகளை குறைக்க உதவும்.

Related News

Latest News